நாட்டு மக்களுக்கு தலைமை தாங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயத்தமாக இருக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலி உலுவிக்கே பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக்கூட்டமொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றின் ஆசன எண்ணிக்கைகள் பற்றி கருத்திற்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைமைத்துவமே முக்கியமானது எனவும்,ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமது குழுவிற்கு தலைமை தாங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் தலைமை தாங்கவும் மக்களுக்காக செயற்படவும் ரணில் விக்ரமசிங்க ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.