இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கட்டில் 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி, 2025 டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது.
இந்த அணியானது முன்னதாக இலங்கை அணியுடன் இடம்பெற்ற போட்டிகளில் அந்த அணி தோல்வியடைந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் தற்போதைய புள்ளிப்பட்டியலில், நியூஸிலாந்து அணி, இங்கிலாந்து அணியை முந்தி நான்காவது இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தொடர்ந்தும் இந்தியா முதலிடம் பெறுவதுடன் அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், இலங்கை மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும், தென்னாபிரிக்கா 6 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்;டுள்ளன. பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.