பொலிவூட் சினிமாவில் ரசிகைகளின் கனவுக் கண்ணனாக இருப்பவர் நடிகர் ரன்பீர் கபூர்.
ரிஷி கபூர்-நீதூ கபூர் ஆகியோரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகனாக நுழைந்தவர் இப்போதும் டாப் நாயகனாகவே இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடிகை ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்த இவருக்கு சமீபத்தில் ராகா என்ற ஒரு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது.
இதேவேளை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இணைந்து மகள் ராகா பெயரில் ரூ. 250 கோடி செலவில் பங்களா ஒன்றை கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.
இக்கட்டடத்தின் கட்டுமானப் பணியை கபூர் தம்பதி அடிக்கடி சென்று பார்த்து வந்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.
தற்போது, பங்களா கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பங்களாவிற்கு கிருஷ்ணராஜ் கபூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பங்களாவின் ஒவ்வொரு மாடியிலும் பெரிய அளவில் ஜன்னல் மற்றும் பால்கனி இருக்கிறது.
பால்கனியில் பெரிய அளவில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் வெளிப்பகுதியில் வெள்ளை மற்றும் கிரே கலர் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் நிலையில், இதற்கு சிலர் விமர்சித்தும், பாராட்டியும் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.