வெற்றிலை பாக்கு விலை அதிகரிப்பு - அம்பலமாகிய மோசடி

tubetamil
0

 இலங்கையில் வெற்றிலை ஒன்றின் விலை 150 ரூபவாக அதிகரித்துள்ள நிலையில் 4 ரூபாவாக இருந்த சாதாரண பாக்கு 30 ரூபாவாகவும், நடுத்தர அளவிலான பாக்கு 40 ரூபாவாகவும், பெரிய பாக்கு ஒன்று 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.



குறித்த இதே வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வரும் பழுக்காத பாக்குகளை இரசாயனம் தடவி பழுத்த பாக்குகளாக சந்தைக்கு விநியோகம் செய்யும் கொள்ளையொன்று அம்பலமாகியுள்ளது.


வவுனியா மக்களும் வியாபாரிகளும் யாழ்ப்பாண பாக்குகளை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.


பாக்கு விலை உயர்வு மற்றும் பாக்கு தட்டுப்பாடு காரணமாக 50 ரூபாயாக இருந்த வெற்றிலை 150 ரூபாயாக உயர்ந்துள்ளது.


சூப்பர் வெற்றிலை என அழைக்கப்படும் வெற்றிலை பாக்கு பொதி ஒன்றின் விலை 200 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், அதில் வெற்றிலை பாக்கு உள்ளடங்களாக பல பொருட்களை உள்ளடக்கியுள்லாமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top