கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரை குறிவைத்துள்ள இஸ்ரேல் இராணுவம், அங்குள்ள லெபனானியர்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, ஹிஸ்புல்லாவின் முன்னாள் தலைவர்களை இஸ்ரேல் இராணுவம் கொன்ற நிலையில் தற்போது அதன் தாக்குதலை பால்பெக் நகரை நோக்கி நகர்த்தியுள்ளது.
இந்நிலையிலேயே அங்குள்ள லெபனானியர்கள் வெளியேறும்படி கோரியுள்ளது.
குறித்த இதே வேளை ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது.
காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள இஸ்ரேலியர்கள் அவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இஸ்ரேல் இலக்கு வைத்துள்ள இடத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய பழங்காலத்து ரோமன் ஆலயம் கட்டிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை இருதரப்பு எல்லையின் முக்கிய பகதியான பெகா பள்ளத்தாக்கிற்கு செல்லும் வெளியான பால்பெக் நகரினை ஏற்கனவே இஸ்ரேல் சுற்றி வளைத்துள்ளதுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.