பொதுத் தேர்தலின் போது அமைதியான சூழலை பேணுங்கள் - வேட்பாளர்களிடம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை

tubetamil
0

 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு அமைதியாக நடைபெற்றதாகவும் எதிர்வரும் தேர்தலில் அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.



நேற்றைய தினம் தெற்கில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் மிகவும் அமைதியாக நடைபெற்று வருகிறது.


சில பகுதிகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விளம்பரங்களை அகற்றுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.


மொத்தம் 7,37,902 அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு உட்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.


மேலும் அரச ஊழியர்கள் நவம்பர் 1 மற்றும் 4 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்கலாம்.


முப்படைகள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் அந்த இரண்டு நாட்களில் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்த மூன்று நாட்களிலும் தபால் வாக்குகளை குறிக்க முடியாத தபால் வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், வரும், 7 மற்றும் 8ம் திகதிகளில், தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top