அநுராதபுரம் மாவட்டம் பதவியா பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட வெடிபொருட்களை பொிஸார் மீட்டுள்ளனர்.
பதவியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை பதவியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 01 ஆம் மைல் பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்ட போதே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டது.
இதில் 75 கிலோ கிராம் துப்பாக்கி, 90 ஜெலிக்னைட் குச்சிகள், 300 டெட்டனேட்டர்கள் மற்றும் 05 வெடிகுண்டுகள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஹிடோகம மற்றும் மாபலடிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்லதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.