யாழ் – ஸ்ரீ நாகவிகாரையில் இடம்பெற்ற வஸ்திர தான நிகழ்வு

tubetamil
0

 யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையில் வஸ்திர தானமும், கட்டின பிங்கல வைபவமும் நேற்று (27)  இடம்பெற்றது.


இந்த நிகழ்வை சர்வதேச தமிழ் பௌத்த காங்கிரசும், சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.



யாழ்ப்பாணம், ஆரியகுளம் ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்திலிருந்து விசேட பூஜை வழிபாடுகளுடன் பெரஹராவானது ஆரம்பமாகி யாழ்ப்பாணம் நாக விகாரையை வந்தடைந்தது.


அதன்பின்னர் விசேட வழிபாடுகளுடன் வஸ்திர தானமும், கட்டின பிங்கல வைபவமும் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில், இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், நாகவிகாரை விகாராதிபதி சிறி விமலதேரர், யாழ். பல்கலைக்கழக முன்னைநாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, மறவன்புலவு சச்சிதாதந்தன், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சி.பி.விக்கிரமசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால உட்பட பலர் கலந்து கொண்ட குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top