இலங்கையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்படுவதாக குடும்ப சுகாதார பணியகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் வௌியிட்டுள்ள இந்த ஆண்டு ஆண்டு வெளியிட்ட குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
இலங்கையில் ஐந்து வயதுக்குக் குறைந்த பராயத்தில் உள்ள 10 ஆயிரத்து 323 சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போன்று 25 ஆயிரத்து 269 பேரளவான ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து வயதுக்குக் குறைவான இலங்கைச் சிறுவர்களில் வயதுக்கேற்ற எடையைக் கொண்டிராத சிறுவர்கள் இரண்டு இலட்சத்தி 15 ஆயிரத்து 386 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு லட்சத்தி 33 ஆயிரத்து 538 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.