உதய கம்மன்பில மற்றோரு ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையையையும் வெளியிட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் "சனல் 4 இல் ஒளிபரப்பான இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு, ஆசாத் மௌலானா என்ற நபர் வௌிப்படுத்திய விடயங்களை அடிப்படையாகக் கொண்டது.
2018 பெப்ரவரியில், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சுரேஷ் சலேவுக்கும், ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய சஹாரானுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பை தாம் ஒருங்கிணைத்ததாகவும், புத்தளம் வனாத்தவில்லுவ காணியில் உள்ள தனது வீட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் மௌலானா தெரிவித்திருந்தார்.
ஜனவரி 2019 இல், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்த நிலத்தில் வெடிபொருட்களைக் கண்டுபிடித்தது" என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் முதலாவது அறிக்கையிற் அவர் கடந்த வாரம் முதலாவது அறிக்கையிற் சமர்பித்ததுடன்
இன்று (28) ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிடுவதாக அறிக்கையினை வெளியிட்ட பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இது தொடர்பில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
2023 செப்டம்பர் 05ஆம் திகதி பிரித்தானியாவின் செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ச்சியின் உண்மைகளை ஆராய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா உள்ளிட்டவர்கள் அடங்குகின்றமாய் குறிப்பிடத்தக்கது.