சிறையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் அர்ஜூன் அலோசியஸ்!

tubetamil
0

 வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அவரது நிறுவனத்தின் மற்றைய அதிகாரி வெலிக்கடை சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் இருவரையும் தற்போது பணித் துறைக்கு அனுப்பப்படும் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அத்துடன் காலை 8 மணியளவில் இரு பிரிவுகளில் இருந்து இருவரும் வெளியே அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் இருவரும் பிற்பகல் 3.30 மணி வரை வேலைப் பிரிவில் பணிபுரிவார்கள் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.



இவர்கள் இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையின் பணிப் பிரிவில் சிறு கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த நிதி வேளை அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அவரது நிறுவனத்தின் மற்றைய அதிகாரி ஆகியோரை சிறைச்சாலையில் வைத்து வைத்தியர் ஒருவர் பரிசோதித்துள்ளனர்.


இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


வற் வரி ஏய்ப்பு சம்பவம் தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் செலுத்தப்படாமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top