ஜனாதிபதி விசேட சந்திப்பு...!

tubetamil
0

 நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்திப்பானது நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அது தொடர்பான செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

முப்படைகளின் பிரதானிகளுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு | Triforces Commanders Meet President Anurakumara

அதன்படி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ச மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர்.







அனுரகுமார திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டபின்னர் பாதுகாப்பு படைகளின் பிரதானிகளுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top