பொதுத்தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரரின் மனைவி...!

tubetamil
0

 இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் அதிகாரி அப்சாரி சிங்கபாகு திலகரத்ன எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். 



இதற்கு முன்னோடியாக அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு - மேற்கு பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அப்சாரி திலகரத்ன தனது கணவரான முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் ஹசன் திலகரத்னவுடன் சேர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளியிட்டார். 


தனது நியமனத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்சாரி சிங்கபாகு திலகரத்ன, பல்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்த இளம் பெண்களை இனங்கண்டு, விளையாட்டு மூலம் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் தனது பங்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு - மேற்கு பிரதான அமைப்பாளராக தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும் அப்சாரி குறிப்பிட்டுள்ளார். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top