எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இரண்டு தமிழர்கள் மற்றும் நான்கு முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் செந்தில் தொண்டமான், முன்னாள் அமைச்சர் சுரேன் ராகவன் ஆகியோர் பெயரும் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அம்பாறையைச் சேர்ந்த அன்வர் முஸ்தபா ஆகியோருடன் ரஷ்தான் ரஹ்மான், ஆதம்பாவா உதுமாலெப்பை, முஹம்மத் முஸம்மில் ஆகிய நான்கு முஸ்லிம்களும் இக்கட்சியின் தேசியப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, தலதா அதுகோரளை ஆகியோரும் இம்முறை தேர்தலில் போட்டியிடாத நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.