தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

tubetamil
0

 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 869 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 265 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 604 முறைப்பாடுகளும் 16 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.


அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 78 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 01 பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


 

மேலும் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், வன்முறைச் சம்பவங்கள் 8 பதிவாகியுள்ளன.


 


அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 723 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 146 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top