முன்னாள் அமைச்சரின் வாகன விபத்தை காணொளிப்படுத்தியவர் கைது..!

tubetamil
0

 குருநாகல் (Kurunegala) வாரியபொல அருகே விபத்துக்குள்ளான டிஃபெண்டர் வாகனத்தை காணொளிப்படுத்திய இளைஞன், கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 


முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு (Lohan Ratwatte) சொந்தமானது என கூறப்படும் டிஃபென்டர் SUV ரக வாகனம் அனுராதபுரம்-பாதெனிய வீதியில், கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.


இதன் காரணமாக பேருந்து நிறுத்தம் மற்றும் வாகனம் பாரியளவில் சேதமடைந்தன.


இதன்போது, வாரியபொல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், குறித்த இளைஞனை அச்சுறுத்தும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிநிறமாய் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top