கடந்த ஜனாதிபதிபதி தேர்தலின் போது மக்களை அச்சுறுத்தும் வகையில் பிரசாரங்களை முன்னெடுத்த குழுவினர் தற்போது மிகவும் அமைதியாகியுள்ளதுடன் அவர்களில் ராஜபக்ச குடும்பத்தை போன்று, , ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட்ட மற்றுமொரு பிரச்சாரக்குழுவினர் வருமானம் இன்றி நிர்க்கதியாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் இருந்து சுதாகரிப்பதற்குள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலும் தோல்வி ஏற்படவுள்ளதாக அவர்களே உறுதி செய்துள்ளனர்.
இதன் காரணமாக பலர் தேர்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளதுடன், சிலர் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு சென்று மன அமைதி பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.