பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல்

tubetamil
0

 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைமை காரணமாக  பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.



இந்த விடயம் தொடர்பில்  கல்வி அமைச்சு இன்று (14) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும் கடுவெல ஆகிய கல்வி வலயங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (15) விடுமுறை என மாகாண கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top