வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

tubetamil
0

 நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக தற்போது மலை நிலைமை தொடர வாய்ப்புள்ளதாக இலங்கை  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 


அதனடிப்படையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளதுடன் காலநிலை அனர்த்தங்களால்  ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரிகை விடுத்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top