பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டி - மகாஜனக் கல்லூரி வெற்றி!

tubetamil
0

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நேற்று (15) இடம்பெற்றது. இதில் மகாஜனக் கல்லூரியின் 17, 20 வயது பிரிவு அணிகள் வெற்றி பெற்றுள்ளன.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குயின்சி தலைமையிலான 20 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில் பொலனறுவை பென்டிவெல கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றி பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் லயன்சிகா, அணித் தலைவி குயின்சி ஆகியோரது கோல்களுடன் 2:0 என மகாஜனா முன்னிலை பெற்றுள்ளது.




அத்துடன் இரண்டாவது பாதியாட்டத்திலும் லயன்சிகா, குயின்சி ஆகியோர் அதிரடியாக ஒவ்வொரு கோல்களைப் பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என சாம்பியனாகியுள்ளது.



குறித்த இதேவேளை உமாசங்கவி தலைமையிலான 17 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.


அதனடிப்படையில்,முதல் பாதி ஆட்டத்தில் அணித்தலைவி உமாசங்கவி, கல்சிகா ஆகியோரது கோல்களுடன் 2:0 என மகாஜனா முன்னிலை பெற்றுள்ளது.


இரண்டாவது பாதியாட்டத்திலும் உமாசங்கவி, கியூஸ்ரிகா ஆகியோர் அதிரடியாக ஒவ்வொரு கோல்களைப் பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என சாம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top