கொழும்பின் புறநகர் பகுதியில் நபர் ஒருவரை கொலை செய்ததாக்க குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் 16 மற்றும் 17 வயதுடைய பதின்ம இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெப்பிலியான பிரதேசத்தில் சிறுவர் இல்லம் ஒன்றின் பாதுகாவலர் கொல்லப்பட்டமாய் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சம்பவம் தினத்தன்று குறித்த பாதுகாவரை கொலையை செய்துவிட்டு, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை திருடி, சடலத்தை பெல்லன்வில ஏரியில் வீச குறித்த அவர்கள் திட்டமிட்டனர்.
எனினும் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் அவ்விடத்திற்கு வந்தமையால் முயற்சி தோல்வியடைந்தது.
அலுபோமுல்ல பபுனுகம பிரதேசத்தில் வசிக்கும் பெபிலியான சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய 80 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
17 வயதுடைய பிரதான சந்தேகநபர் அதே சிறுவர் இல்லத்தில் வாழும் நிலையில் 16 வயதுடைய மற்றுமொரு சிறுவனும் இந்தக் குற்ற செயலுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
ஏனைய சிறுவர்களை தனி அறையில் அடைத்து வைத்திருந்த பிரதான சந்தேகநபர், தனது அறையின் ஜன்னல் ஊடாக வெளியே வந்து பாதுகாவலரை கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.