நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய ஆளுநர் செயலக காணி உதவி ஆணையாளர், அபிவிருத்தி உதவியாளர் மற்றும் சாரதி ஒருவருக்குமாக குறித்த இட மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இடமாற்றங்களை தற்போதைய ஆளுநரின் செயலாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வடக்கு மாகாண புதிய ஆளுநராக வேதநாயகன் பொறுப்பேற்று ஒரு வாரம் முடிவதற்கு முன்னர் குறித்த இட மாற்றங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.