ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து அநுரவுக்கு வந்த தனிப்பட்ட செய்தி..

tubetamil
0

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தனது செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



இந்த சந்திப்பு நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தூதுவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் தனிப்பட்ட வாழ்த்தினையும், முக்கிய தகவலொன்றையும் தெரிவித்துள்ளார்.


புதிய ஜனாதிபதியின் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி புட்டின் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இராஜதந்திர உறவுகளை பரஸ்பரம் மேம்படுத்துவதற்கு இரு தரப்பினதும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், வர்த்தகம், முதலீடு, கலாசாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top