லெபனானுக்குள் ஒரு வரையறுக்கப்பட்ட தரை நடவடிக்கையை இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதுடன் அது விரைவில் ஆரம்பிக்கும் என்று இஸ்ரேல் அமெரிக்காவிடம் கூறியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் 2006 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் போரை விட இந்த நடவடிக்கை சிறியதாக இருக்கும், அத்துடன் எல்லையோர சமூகங்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக தரைப்படை பயன்படுத்தப்படலாம் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்டும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், லெபனானில் இஸ்ரேலிய தரைப்படை நடவடிக்கைகளை தாம் எதிர்ப்பதாகவும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும் அறிவி;த்துள்ளார்.
செப்டெம்பர் 23 முதல் லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.