கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(14) அமெரிக்கா தோழரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வாங்கி வெளியிருள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.49 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் கனேடிய டொலரின் விற்பனை விலை 217.25 ரூபாவாகவும், கொள்வனவு விலை 207.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 313.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்ரேர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 389.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 375.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.