இலங்கை நோக்கி பறந்த விமானத்தில் விமானிகளிடையே முறுகல்..!

tubetamil
0

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி சென்ற விமானத்தில்  பிரதான விமானிக்கும் துணை விமானிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டமை தொடர்பில் விசாராணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதமானது கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்றது.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 

எயார்பஸ்-330 ரக UL 607 விமானம் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது விமானிகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கழிப்பறை இடைவேளை தொடர்பில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமான பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் ளெியாகி உள்ளன.

அத்துடன் இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top