கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 208 குடும்பங்களைச் சேர்ந்த 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள
பாரதிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 105 குடும்பங்களைச் சேர்ந்த 345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்ட மான்நகர் கிராம சேவையாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மாவடியம்மன் கிராம சேவையாளர் பிரிவில் 01 குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கனகபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 01 குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 05 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
திருநகர் கிராம சேவையாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கனகாம்பிகைக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவையாறு மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயந்திநகர் கிராம சேவையாளர் பிரிவில் 01 குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மகள்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிசார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.