இலங்கை நாடாளுமன்றத்திற்கு 20 பெண் உறுப்பினர்கள் தெரிவு!

tubetamil
0

 2024ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் 20 பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஹரிணி அமரசூரிய, கடந்த பொதுத் தேர்தலின் போது தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதே வேளை தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினராக சமன்மலி குணசிங்க, பதுளை மாவட்டத்திலிருந்து  அம்பிகா சாமுவேல், மாத்தறை மாவட்டத்திருந்து சரோஜா போல்ராஜ், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து  நிலுஷா கமகே, கேகாலை மாவட்டத்திலிருந்து  சாகரிகா அதாவுத, புத்தளம் மாவட்டத்திலிருந்து  ஹிருணி விஜேசிங்க, மொனராகலை மாவட்டத்திலிருந்து  சதுரி கங்கானி, மொனராகலை மாவட்டத்திலிருந்து  சதுரி கங்கானி, கண்டி மாவட்டத்திலிருந்து  துஷாரி ஜயசிங்க, காலி மாவட்டத்திலிருந்து  ஹசர லியனகே, மாத்தளை மாவட்டத்திலிருந்து  தீப்தி வாசலகே, மற்றும் யாழ் மாவட்டத்திலிருந்து  ராசலிங்கம் வெண்ணிலா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.



இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களை பிரதிநித்துவம் செய்த இரண்டு பெண்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


அதற்கமைய முன்னாள்,அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் மகளான சமிந்திரனி கிரியெல்ல,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகியோர் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top