இலங்கையில் டெங்கு நோய் பரவல்: 22 மரணங்கள் பதிவு! -கொழும்பு, களுத்துறை, கம்பஹா முன்னணி!

tubetamil
0

 நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், நவம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 2,655 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.



அதனடிப்படையில், இவ்வருடம்  45,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது.


மேலும் மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அங்கு தற்போதுவரை  19,294 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன்  வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4,999 நோயாளர்களும், மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4,791 நோயாளர்களும், 


சப்ரகமுவ மாகாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,521 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top