சட்டங்களை உருவாக்கினால் மாத்திரம் போதாது. அந்த சட்டங்கள் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்ற உணர்வு மக்களுக்கு ஏற்படவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட விசேட செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தவோர் அரசியல்வாதியும், அதிகாரத் தத்துவம் கொண்ட எவரும் இனிமேல் சட்த்தைவிட மேலானவர்களாக இருக்கமுடியாது. அனைவரும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும். அதைப்போலவே சட்டம் பற்றி மக்கள் மத்தியில் சிதைவடைந்துள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்நிலையில், கடந்த காலம் முழுவதும் சட்டம் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்து காணப்பட்டுள்ளது.
இந்த வகையில் குறிப்பாக ஜனாதிபதி என்றவகையிலும் அரசாங்கமென்ற வகையிலும் நாங்கள் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே.
மேலும், நாம் எவரையும் பழிவாங்கவோ, எவரையும் பின்தொடர்ந்து சென்று வேட்டையாட வேண்டிய தேவையோ எமக்கு கிடையாது. ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை நாங்கள் நிலைநாட்டுவோம் எனவும் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.