வெறும் 25 நாட்களில் ஜாக்பொட் ஹிட் அடித்த அமரன் பட கலெக்‌ஷன்!

tubetamil
0

 கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த அமரன் திரைப்படம் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த முதல்  3 திரைப்படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.



இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது.


அத்துடன்  ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.


இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயிநீத்த, மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் படமானது  வெளிவந்த முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.


அதனை தொடர்ந்து  தொடர்ந்து 10 நாட்களில் ரூ. 200 கோடியும், 20 நாட்களில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், 25 நாட்களை கடந்துள்ள அமரன் படம், இதுவரை உலகளவில் ரூ. 314 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்லதாவும்  இதன்மூலம் ரூ. 85 கோடிக்கும் மேல் லாபம் வந்துள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top