தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர் சுப்பராஜு தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சமி, போக்கிரி, சரவணா, ஆயுதம், ஆதி, பாகுபலி 2, அசுரகுரு ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்துள்ளார்.
அத்துடன் பாகுபலி 2 திரைப்படத்தில் குமார வர்மாவாக இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தன்னுடைய திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சுப்பராஜு, திருமணத்தையும் அறிவித்துள்ளார். இறுதியில் வென்றது என்று அவர் தன்னுடைய கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.