தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைத்தன்யாவின் இரண்டாவது திருமணம் நடிகை சோபிதாவுடன் இடம்பெறவுள்ளது.
சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் சிம்பிளாக இடம்பெற்றது.
இந்நிலையில், சில தினங்களாக இவர்களது திருமணம் குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது நாக சைத்தன்யா-சோபிதா திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக. அதுவும் ரூ.50 கோடி கொடுத்து இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை வாங்கி உள்ளதாகவும் ஒரு செய்தி உலா வந்தது.
எனினும் இந்த செய்தி பொய்யானது என்றும், இந்த செய்தி தேவையில்லாத வதந்தி என்றும், சோபிதா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் தங்களின் திருமணத்தை தனிப்பட்ட முறையில் ரகசியமாக வைக்க விரும்புவதாக நெருக்கமானவர்கள் கூறியிருப்பதாக பத்ரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
.