நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி69 ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சென்னையில் செட் அமைக்கப்பட்டு தளபதி69 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஒரு பேட்டியில் தான் தளபதி 69ல் நடிக்க இருப்பதாக கூறி இருந்தார். இருப்பினும் தற்போது அது நடக்கவில்லை என தகவல் வந்திருக்கிறது.
ஹெச் வினோத் அவரை அணுகி பேசுச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது அவர் படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.