இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரங்வல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், முதலாவதாக சபாநாயகர் நியமனம் இடம்பெற்றுள்ளது.
சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்லவை நியமிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தம்மை குறிப்பிடத்தக்கது.