70 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்..!

tubetamil
0

 அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.



இது குறித்து நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


அதற்கமைய, முதியோர் கொடுப்பனவு பெறும் முதியோர்க்கான 3,000 ரூபாய் கொடுப்பனவானது இந்த மாதத்திலிருந்து குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட அந்த சபை தீர்மானித்துள்ளது.


அதனடிப்படையில்  அஸ்வெசும கொடுப்பனவைப் பெறாத குடும்பத்தில் உள்ள 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்கள் அவர்களின் கொடுப்பனவை, வழமைபோல அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top