ஈராக் நாடு பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 9 ஆக குறைக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது.
பெண்களை முறைகேடான உறவுகளிலிருந்து பாதுகாக்க இந்த சட்டதிருத்தை மேற்கொள்ள உள்ளதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.
இதனால், கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம், இளவயதில் கர்ப்பம் தரித்தல் ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டி பெண்கள் அமைப்பினர், மனித உரிமை குழுவினர் ஆகியோர் இந்த சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் பொருட்படுத்தாத இராக் அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து மசோதாவை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.