கனடாவில் வெடிக்கும் இந்துக்களின் போராட்டம் - பொலிசார் எச்சரிக்கை

tubetamil
0

 கனடாவில் இந்துக்கள் கோவில் தாக்கப்பட்டதை கண்டித்து கோவில் அருகே இந்துக்கள் போராட்டம் நடத்த முயற்சித்த போது, கோவில் அருகே கூடினால் கைது செய்யப்படும் என்று கனடா பொலிஸார் எச்சரிகை விடுத்துள்ளனர்.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 


கனடாவில் டொரன்டோ மாகாணத்தில் ஹிந்து சபை கோயில் உள்ள நிலையில், அங்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய காணொளிகள் வெளியானது.


இதன்போது , காலிஸ்தான் கொடி கம்பங்களை வைத்து குழந்தைகள் பெண்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்துக்கள் ஒவ்வொருவரையும் குறிவைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால், அந்த பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.


அத்துடன் சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.


இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து கோயில் முன்பு இந்துக்கள் கூடி போராட்டம் நடத்திய நிலையில், அதில் ஏராளமான இந்துக்கள் கலந்து கொண்டனர்.


இதனையடுத்து பொலிசார் குவிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக கோவிலுக்குள் கூடினால் கைது செய்யப்படுவார்கள் என வும் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்றும் பொலிசார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்லதாவும் தெரிய வந்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top