உலகிலேயே ஆக அதிக அளவு நீட்டி மடக்கக் கூடிய மின்திரையை எல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த மின்திரையை ஏறக்குறைய 50 சதவீதம் வரை நீட்டி இழுக்க முடியும் என்று எல்ஜி நிறுவனம் கூறியுள்ளது.
அதாவது ஏறக்கறைய 50 சதவீதம் அளவுக்கு திரையை நீட்டி இழுக்க முடியும். இது, இந்தத் துறைக்குள் ஆக அதிக அளவு நீட்டிக்கக்கூடிய திரையாகக் கருதப்படுகிறது.
ஐந்து ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு சாத்தியாகியிருக்கும் இந்தக் கண்டுபிடிப்பு நவம்பர் 8ஆம் தேதி எல்ஜி சயன்ஸ் பார்க்கில் நடைபெற்ற தொழிற்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
அத்துடன் எல்ஜியின் புதிய 30 செ.மீட்டர் கணினி திரையை 46 செ.மீட்டர் வரை இழுத்து நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.