கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை புதிய அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான உதய சேனவிரத்ன அறிக்கையை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.