போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதி அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி நாளை தமிழ்மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்ரிக்கப்படுவது வழமை .
அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.
அந்தவகையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதி மற்றும் மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராகி வருகின்றமை குறிப்பிடதக்கது.