ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைபடித்தவர் தான் நடிகர் துல்கர் சல்மான்.
தெலுங்கில் நடித்த சீதா ராமம் படம் பெரிய அளவில் ரீச் கொடுத்ததை தொடர்ந்து கடந்த அக்டோபர் 31ம் திகதி துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் என்ற படம் வெளியாகியிருந்தது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர், மீனாட்சி சௌத்ரி நடித்த இப்படம் அமரன் படத்திற்கு பிறகு அடுத்தபடியான ஹிட் படமாக அமைந்துள்ளது.
இந்த படம் எதிர்வரும் நவம்பர் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.