மலையகத்தில் இடம்பெற்ற கோர விபத்து - இரு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழப்பு

tubetamil
0

மலையகத்தில் உள்ள பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்த நிலையில்   காயமடைந்த  35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அத்துடன் இந்த விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சேதவிபரம் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top