இதுவரை பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்தவர் தான் தளபதி விஜய். அவர் அரசியலுக்கு செல்வதால் சினிமாவில் ஒரு வெற்றிடம் வரப்போகிறது என்ற பேச்சு போய்க்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் நடித்து வெளியான கோட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை விஜய் சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு தனக்கு முக்கியமான வேலை இருப்பதால் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு செல்வார். இதனால் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் விஜய் படங்கள் எவ்வாறு அதிக வசூல் செய்யுமோ அதேபோல் சிவகார்த்திகேயனின் அமரன் படமும் வசூலை வாரி குவித்து வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஆகிறது.
இதுவரை உலகம் முழுவதும் 165 கோடி வசூலை அமரன் படம் அள்ளி உள்ளது. மேலும் மிக விரைவில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்க இருக்கிறது. போட்ட பட்ஜெட்டை காட்டிலும் பல மடங்கு லாபம் பார்த்ததால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.
மேலும் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமரன் படம் அமைந்திருக்கிறது.