கொலம்பியாவில் கடும் நிலநடுக்கம்

tubetamil
0

 தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்கு கடற்கரைக்கு அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.



இந்த நிலநடுக்கமானது இலங்கை நேரப்படி  இன்று காலை  8.44 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அத்துடன் 10 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் முதலில் 5.25 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 77.50 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top