பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தகவல்....!

tubetamil
0

           காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை குறித்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வைரஸ் காய்ச்சல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜி.விஜேசூரிய மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் சிறிய கிருமிகள்.




அவை உயிர்வாழ்வதற்காக மனிதர்களை தாக்கும் வாய்ப்பைத் தேடுகிறது, இதன்போது காய்ச்சல், சளி, இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகள் மனித உடலில் தோன்றக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருமல், தும்மல், பொதுவாக நுளம்புகள் அல்லது உண்ணி போன்ற பாதிக்கப்பட்ட பூச்சி கடித்தல்,மற்றும் அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் பருகுவதன் மூலம் இந்த வைரசுகள் பரவக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top