அநுர கட்சிக்குள் ஏற்படவுள்ள பாரிய மாற்றம் - பதவியிலிருந்து விடுபடத் தீர்மானித்துள்ள டில்வின் சில்வா.

tubetamil
0

 மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா இதுவரை தான் வகித்து வந்த பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து விடுபடத் தீர்மானித்துள்ளார்.

நீண்டகாலமாக கட்சிக்காக பணியாற்றிய நிலையில், மற்றுமொருவருக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவருக்கு பதிலாக பிரேகரிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சிக்காக நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய நிலையில், பாரியதொரு வெற்றியை பெற முடிந்துள்ளதாக டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்தப் பதவிகளிலிருந்து விலகி ஓய்வுவெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் கட்சித் தகவல் தெரிவிக்கின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top