வில்லனாக தனது திரைப்பயணத்தை துவங்கி நாயகன், வில்லன், குணச்சித்திர நாயகன் என கலக்கியவர் நடிகர் சத்யராஜ். ரஜினி உள்ளிட்ட நடிகர்களுக்கு இவர் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.
இவர் அண்மையில் சென்னையில் திராவிடம் குறித்து நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இதன் போது "தம்பி அஜித் பைக்கில் டூர் சென்ற போது ஒரு வீடியோவில் சில நல்ல கருத்தை கூறிருந்தார். அதாவது சம்பந்தமே இல்லாமல் ஒரு மனிதனுக்கு கோவம் வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் மதம் தான் என்று சொல்லிருந்தார்.
ஏதோ ஒரு நாட்டுக்கு செல்கிறோம் ஆனால் அங்கு இருக்கும் மனிதர்கள் இடையே எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது. எல்லாம் இந்த மதம் தான் தேவை இல்லாமல் ஒரு வெறுப்பை உருவாக்கி விடுகிறது என்று ஒரு அழகான பதிவை வெளியிட்டிருந்தார்.
அவருக்கு எனது பாராட்டுக்கள். மேலும், திராவிடம் தான் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது. தற்போது வட மாநில தொழிலாளர்கள் இங்கு அதிகம் வருகிறார்கள்.
அவங்க மாநிலத்தில் வந்து ஜாதிய ஒடுக்குமுறையை அனுபவித்திருப்பார்கள்.. உயர்ஜாதி என்று கருதப்படுபவர்கள் யாரும் இங்கு வேலைக்கு வந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நாம் திராவிடம் என்றால் என்ன என்பதை புரிய வைக்க வேண்டும்" என இன்னும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.