எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு அரச இல்லங்கள் வழக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் புதிய அமைச்சரவையில் 25இற்கும் குறைவான அமைச்சர்களே செயற்படுவார்கள் எனவும் தெரிவித்த அவர், இதுவரை காலமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு கொழும்பில் அரசாங்க வீடுகள் வழங்கப்பட்டு வருவது வழமை.எனினும் அடுத்து வரும் அரசாங்கத்தில் அந்த சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமைச்சர்களை அரச ஊழியர்களாக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் பெருமளவில் குறைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.