வெளிநாடு செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் மூவர் , முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஸ்ய இராணுவத்தின் கூலிப்படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்டுத்தருமாறு உறவினர்கள் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, முகவர்கள் அவர்களை ஏமாற்றி ரஸ்ய இராணுவத்தின் வெளிநாட்டு கூலிப்படையில் இணைத்துள்ளதாக இளஞர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களை மீட்க நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சணக்காண பணத்தை செலவழித்து வெளிநாடு செல்லும் ஆசையில் முகவர்களை அனுகிய நிலையில் , ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக முகவர் ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்து கண்ணீருடன் குறித்த இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பியதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.